Thursday, 20 October 2011

ஆளும் கட்சி உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் மஹிந்த

ஆளும் கட்சி உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக லங்காதீப பத்திரிகையின் குருதா விக்ரஹாய கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை சம்பவத்தின் பின்னர் இந்த நிலைமை வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாட்டு மக்கள் மீதிருக்கும் அபிமானத்தைக் கொண்டே ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக போர் வெற்றியினால் ஏற்பட்ட பிரபல்யமே தேர்தல் வெற்றிகளுக்கு வழியமைத்துள்ளதாகவும், இந்த அபிமானம் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஆட்சி நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கங்கள் கொள்கை அடிப்படையில் ஆட்சியை நடத்திய போதிலும், தற்போதைய அரசாங்கம் எந்தவிதமான கொள்கைகளும் இன்றி ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய அரசு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் உத்திகளைப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு சமவுரிமை வழங்குதல், குற்றவாளிகளை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக லங்காதீப பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ThanksTamizhWinn

No comments:

Post a Comment