| எழுத்தாளர் சவுக்கு |
| செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011 21:17 |
| நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில் தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன். தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னடைய பணியை சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன். இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் என்றும் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார்கள். நீதியரசர் மார்கண்டேய கட்ஜு சமீபத்தில் மத்திய அரசாங்கம் புதிதாக தொடங்கப் பட உள்ள தொலைக்காட்சி சேனல்களுக்கென்று விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளது.இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19 (1) (a) கருத்துச் சுதந்திரத்தோடு ஊடகத்துக்கான சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளது. அனால் அந்த சுதந்திரம் கட்டுப்பாடற்ற வகையில் இருக்க முடியாது. நியாயமான சில கட்டுப்பாடுகள் வேண்டும். பாரபட்சமில்லாமல் உண்மைத் தன்மையோடு மக்களுக்கு செய்திகளைத் தர வேண்டியது, ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் கடமை. ஆனால், இந்திய ஊடகங்கள் இந்த செயலை பொறுப்போடு செய்கின்றனவா ? பொறுப்பற்ற முறையில் ஊடகங்கள் செயல்படுவது குறித்த சில சம்பவங்களை பார்ப்போம். ஊடகங்கள் பல நேர்வுகளில் செய்திகளை திரித்து வெளியிடுகின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதி க்யான் சுதா மிஷ்ராவோடு நான் உச்ச நீதிமன்ற டிவிஷன் பென்ச்சில் பல மாதங்கள் அமர்ந்திருக்கிறேன். ஒரு நாள் இந்தியாவின் முக்கிய செய்தித் தாள் ஒன்று முதல் பக்கத்தில் நீதிபதி மிஷ்ராவின் புகைப்படத்தை வெளியிட்டு “தன் மகள்கள் கடன் சுமை (liability) என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவிக்கிறார்” என்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி முழுக்க முழுக்க திரிக்கப் பட்ட உண்மைக்கு புறம்பான செய்தி, அதுவும் பிரபலமான ஆங்கில செய்தித் தாளின் முதல் பக்கத்தில் வந்தது. உண்மை நிலவரம் என்னவென்றால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக்களையும் கடன்களையும் வெளியிட வேண்டும். கடன்கள் என்ற பிரிவில், நீதிபதி மிஷ்ரா “இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். மிகச் சரியாகப் பார்த்தால், இதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை. கடன்கள் என்றால் வீட்டுக் கடன், கார் கடன் போன்றவைதான் அடங்கும். ஆனால் நீதிபதி மிஷ்ரா எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணத்துக்கு ஏராளமான பணம் செலவு ஆகும் என்ற பொருளில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டது. மற்ற இருவருக்கும் இனிதான் திருமணம் செய்ய வேண்டும். நீதிபதி மிஷ்ரா நிச்சயமாக தன்னுடைய மகள்களை கடன் சுமை என்ற பொருளில் அவ்வாறு குறிப்பிடவேயில்லை. பிரசுரிக்கப் பட்ட அந்தச் செய்தி முழுக்க முழுக்க பொய்யானதும், ஆட்சேபகரமானதும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பிரசுரிக்கப் பட்ட செய்தி. இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கு மட்டும் துயரத்தையும் தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்த வில்லை. அவரின் குடும்பத்தினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி நீதிபதி மிஷ்ராவுக்கும் அவர் குடும்பத்துக்கும் எத்தனை வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும் என்பதை அந்த செய்தித்தாளின் பொறுப்பாளர்கள் உணர்ந்திருப்பார்களா ? நிச்சயமாக இல்லை. அவரின் நோக்கம் செய்தியை திரிப்பதன் மூலமாக பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே. அப்படியே தன் மகள்களைப் பற்றி நீதிபதி மிஷ்ரா எழுதியது தவறு என்று வைத்துக் கொண்டாலும், அடுத்தவருக்கு எத்தனை வேதனையை ஏற்படுத்தும் என்று உணராமல் இந்த தவறை திரித்து செய்தியாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் ? இங்கே குழுமியிருக்கும் ஊடகத்துறையினரே நீங்களே சுயபரிசோதனை செய்து இதற்கான விடையை தேடிக் கொள்ளுங்கள். சமீப காலமாக, பணம் வாங்கிக் கொண்டு செயிதி வெளியிடும் போக்கு வளர்ந்து வருகிறது. 2009 தேர்தலில் இது பெரிய சர்ச்சையானது. இதை எப்படித் தடுப்பது என்பதை நாம் விவாதித்து முடிவு காண வேண்டும். 19.09.2011 நாளிட்ட தலைமை தகவல் ஆணையரின் உத்தரவுப் படி பிரனஞ்சோய் குஹா தாகுர்தா மற்றும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆகியோர் அடங்கிய, இந்த விவகாரம் குறித்து ஏற்படுத்திய ஆய்வுக் கமிட்டியின் அறிக்கை ப்ரஸ் கவுன்சிலின் இணைய தளத்தில் ஏற்றப் பட்டுள்ளது. இந்த அறிக்கையை ப்ரஸ் கவுன்சில் தனது 26.04.2010 நாளிட்ட கூட்டத்தில் நிராகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. அடுத்ததாக ஊடகங்கள் உண்மையான விவகாரங்களை செய்தியாக்காமல், அவசியமற்ற விவகாரங்களை செய்தியாக்குவது அடிக்கடி நடக்கிறது. நம் நாட்டில் கவனிக்கப் பட வேண்டிய விஷயங்கள், வறுமை, வேலையின்மை, போதுமான வீட்டு வசதி சுகாதார வசதியின்மை, 80 சதவிகித மக்கள் மோசமான பொருளாதார சூழ்நிலையில் வாழ்வது ஆகியவையே கவனிக்கப் பட வேண்டிய செய்திகள். ஆனால் இந்த விவகாரங்களை புறந்தள்ளி விட்டு, ஊடகங்கள் சினிமா நடிகரின் மனைவி கர்ப்பமானது, அவர் ஒரு குழந்தை பெற்றெடுப்பாரா, இரட்டை குழந்தை பெற்றெடுப்பாரா என்பது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. இதுவா இந்த தேசத்தை பீடித்திருக்கும் முக்கிய பிரச்சினைகள் ? லாக்மே இந்திய ஃபேஷன் விழா நடக்கையில் அரசு அங்கீகாரம் பெற்ற 512 செய்தியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாடல்கள் பருத்தி ஆடைகளை அணிந்து அணி வகுப்பதை கவனமாக செய்தியாக்கும் செய்தியாளர்கள் அ அந்த விழா நடக்கும் இடத்திலிருந்து விமானத்தில் ஒரு மணி நேரத்தில் செல்லக் கூடிய இடத்தில் ந்த பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதை வசதியாக மறந்து விட்டார்கள். ஓரிருவரைத் தவிர விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி யாருமே கவலைப் படுவதில்லை. இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? இந்தியாவின் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களின் மோசமான பொருளாதார சூழலை கண்டுகொள்ளாமல், கவர்ச்சியும் பரபரப்பும் இருக்கும் போலியான இடங்களில் தங்கள் கவனத்தை செலுத்துவது முறையான செயலா ? மக்களுக்கு ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடச் சொல்லுங்கள் என்று சொன்ன ராணி மேரி அன்டோனியெட் போல ஊடகங்கள் நடந்து கொள்ளவில்லை ? ஊடகங்கள் விவசாயிகளின் தற்கொலைகள், விலைவாசி உயர்வு, என முக்கியப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் இது 5 முதல் 10 சதவிகிதமே. மொத்த ஊடகத்தின் கவனமும், திரைப்பட நட்சத்திரங்களின் வாழ்க்கை, பாப் இசை, பேஷன் பரேடுகள், கிரிக்கெட் மற்றும் ஜோதிடத்திலேயே இருக்கிறது. சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அருகேயும், மும்பாய், பெங்களுரிலும் குண்டு வெடிப்புகள் நடந்தன. குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே டிவி சேனல்கள் இந்தியன் முஜாஹிதீன் அல்லது ஜெய்ஷ் ஏ முகம்மது அல்லது ஹர்கத்துல் ஜிஹாத் ஏ இஸ்லாம் போன்ற அமைப்புகள் ஈமெயில் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்றுக் கொண்டன என்று செய்திகள் வெளியிடுகின்றன. இது போன்ற இயக்கங்களின் பெயர்கள் எப்போதுமே இஸ்லாமியப் பெயர்களாக இருக்கும். ஒரு ஈமெயிலை யாரோ ஒரு விஷமி எளிதாக அனுப்பமுடியும். ஆனால் இதை டிவிக்களில் செய்தியாக காட்டுவதும், செய்தித் தாள்களில் அச்சிடுவதும் இந்தியாவில் உள்ள அத்தனை இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற போக்கு உள்ளது. உண்மை என்னவென்றால் அனைத்து சமூகங்களிலும், இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ அல்லது எந்த ஜாதியோ அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவிகிதத்தினர் நல்லவர்கள். ஆனால் இது போலச் செய்திகள் வெளியிடுவதால், எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் என்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்கும். தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக எஸ்எம்எஸோ ஈமெயிலோ அனுப்பும் நபரின் நோக்கம் நிச்சயமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இடைவெளியை உருவாக்குவதுதான். இது பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி. தெரிந்தோ தெரியாமலோ இந்திய ஊடகம் இந்தத் தந்திரத்தை கையாளுவது சரியா ? ஊடகத்துறையில் உள்ள சில குறைகளை சுட்டிக் காட்டினேன். ஊடகத்தில் மட்டுமல்லாமல், நீதித் துறை அரசு நிர்வாகம் போன்ற துறைகளிலும் குறைகள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் அனைவரும் இணைந்து இந்தக் குறைகளை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஊடகத்துறையில் உள்ள குறைகளைப் போக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலம் தீர்க்கும் ஜனநாயக வழி. மற்றொன்று அரசு விளம்பரங்களை நிறுத்துவது, கடுமையான அபராதம் விதிப்பது என்ற கடுமையான வழி. என்னுடைய கருத்தில் ஜனநாயகபூர்வமான வழியை முதலில் கடைபிடிக்க வேண்டும். இதன் பொருட்டு, நான் ஊடகத் துறையினரை, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்துறையினரை அடிக்கடி சந்தித்து உரையாடலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அந்த விவாதங்களின் போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லாமல், நாமே சுயபரிசோதனை செய்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை கண்டறியலாம். இந்த கலந்துரையாடல்கள் இரண்டு மாதங்களுக்கோ, மூன்று மாதங்களுக்கோ ஒரு முறை நடக்கலாம். அப்போதுதான் மக்களுக்கு ஊடகம் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ப்ரஸ் கவுன்சிலின் கட்டுப்பாட்டுக்குள் தொலைக்காட்சி ஊடகம் வராது என்றாலும் கலந்து உரையாடுவதில் தவறேதும் இல்லை. அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம் இரண்டுக்கும் சமமான பொறுப்பு உள்ளது. ஒரு வேளை ஊடகங்கள் ஒத்துழைக்க மறுத்தால் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக விவாதங்களின் மூலம் சுய கட்டுப்பாடு விதித்துக் கொள்ளலாம். இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு தொலைக்காட்சிகளுக்கு கொண்டு வந்துள்ள கட்டுப்பாடுகளைக் கூட தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது வரை ப்ரஸ் கவுன்சிலின் பணி தாவாக்களை தீர்த்த வைப்பது மட்டுமே. ஆனால் நான் ப்ரஸ் கவுன்சிலை சமரச மையமாக மாற்ற வேண்டும் என்றும், அதுவே ஜனநாயகபூர்வமான வழி என்றும் கருதுகிறேன். இதற்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இந்தியா மிக முக்கியமான மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. விவசாயச் சமூகமாக இருந்து வந்த இந்தியா தற்போது தொழில் சார்ந்த சமூகமாக மாறி வருகிறது. 16 முதல் 19ம் நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய வரலாற்றைப் படித்திருப்பீர்க ளேயானால் தொழில் புரட்சி நடந்த அந்த காலகட்டத்தில் கடும் கலவரமும், குழப்பங்களும், போர்களும் நடந்தது என்பதைக் காண முடியும். அந்த நெருப்பில் குளித்த பிறகே ஐரோப்பா தற்போது உள்ளது போல நவீன சமுதாயமாக மாறியது. தற்போது இந்தியா அந்த நெருப்பில் இறங்கியுள்ளது. இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்தியா ஒரு நவீன தொழில் சார்ந்த சமூகமாக மாறும் வரை மிகுந்த வேதனையான காலகட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஊடகங்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சமூகத்திற்கு உதவ வேண்டும். சாதி உணர்வு, மத உணர்வு போன்றவற்றுக்கு எதிராக எழுதி நவீன விஞ்ஞான உணர்வுகளை வளர்க்கலாம். முடிக்கும் முன்பாக அஜ்மீர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பாகிஸ்தான் மருத்துவர் டாக்டர் கலீல் க்ரிஸ்டியை விடுவிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொள்கிறேன். கலீல் சிஸ்டி 80 வயதானவர். அவர் இன்னும் நீண்ட நாள் வாழப் போவதில்லை. அவர் மிகச் சிறந்த மருத்துவர். கராச்சி மருத்துவக் கல்லூரியில் படித்து விட்டு, எடின்பர்க் பல்கலைகழகத்தில் பிஎச்டி முடித்தவர். அவர் ஒரு இதய நோயாளி. மேலும் பல்வேறு நோய்களும் அவருக்கு இருக்கிறது. அவரால் நடக்க முடியாது. மனிதத்தன்மையோடு அவரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். விடுதலை செய்யப் பட்டால் அவர் கராச்சியில் உள்ள தனது மனைவியோடும் மகளோடும் அவர் இறுதிக் காலத்தை கழிக்க முடியும். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப் பட்டிருந்த கோபால் தாஸ் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசு அவரை விடுதலை செய்தது. ஆனால் இந்திய அரசு பல மாதங்களுக்கு முன்னால் உள்துறை அமைச்சர், பிரதமர், ராஜஸ்தான் மாநில ஆளுனர் ஆகியோருக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நாம் இவரை விடுதலை செய்தால், இந்தியாவின் நன்மதிப்பு கூடும். ஆனால் இவர் இந்தியச் சிறையில் இறந்தால, நமக்கு தீராத அவப்பெயர் உண்டாகும் |
Voice Of Thaai
Saturday, 29 October 2011
ஊடகத்துறையில் உள்ள சில குறைகளை சுட்டிக் காட்டி
Thursday, 20 October 2011
ஆளும் கட்சி உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதில் நெருக்கடிகளை எதிர்நோக்கும் மஹிந்த
ஆளும் கட்சி உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக லங்காதீப பத்திரிகையின் குருதா விக்ரஹாய கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை சம்பவத்தின் பின்னர் இந்த நிலைமை வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாட்டு மக்கள் மீதிருக்கும் அபிமானத்தைக் கொண்டே ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக போர் வெற்றியினால் ஏற்பட்ட பிரபல்யமே தேர்தல் வெற்றிகளுக்கு வழியமைத்துள்ளதாகவும், இந்த அபிமானம் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஆட்சி நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கங்கள் கொள்கை அடிப்படையில் ஆட்சியை நடத்திய போதிலும், தற்போதைய அரசாங்கம் எந்தவிதமான கொள்கைகளும் இன்றி ஆட்சி நடத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய அரசு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் உத்திகளைப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு சமவுரிமை வழங்குதல், குற்றவாளிகளை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக லங்காதீப பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ThanksTamizhWinn

Wednesday, 19 October 2011
மாவீரர் நாள்
ஈழத் தமிழரின் வரலாற்றிலே, உலகத்தமிழரின் சரித்திரத்திலே மறக்கவோ அல்லது மட்டுப்படுத்தவோ முடியாத ஓர் உணர்வுமிக்க, வரலாற்றுப் பெருமைதரும் நாள்தான் நாம் ஆண்டுதோறும் அனுசரிக்கும் இந்த மாவீரர் நாள்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பெறமுடியாத புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் பெற்ற எம் காவிய நாயகர்களைக் கௌரவிக்கும் தினமல்லவா இந்தக் கார்த்திகை 27.
இனக்கலவரங்கள் மூலம் சிங்களக் காடையரும் சிங்கள அரசும் சேர்ந்து நடாத்திய இன அழிப்பைத் தடுக்க, எமது பாரம்பரிய கலாச்சாரத்தை சீர்குலைக்கும் அரசின் போக்கை நிறுத்த, தமிழர் பிரதேசத்திலான சிங்களக் குடியேற்ற்த்தைத் தடுத்து நிறுத்த ஆயுதம் எந்திய எம் சரித்திர நாயகர்களை நினைவுகூரும் வேளைதானே நாம் வருடாவருடம் அனுஷ்டிக்கும் மாவீரர் வாரம்.
காலத்தின் தேவையை உணர்ந்து தேசியத்தலைவரின் கைவண்ணத்தில் உருவான எமது வீரத்தின் சின்னங்களை எந்தவித வேறுபாடுமின்றி, எல்லாத் தமிழரும் ஒன்றாகப் பூஜிக்கும் ஓர் புனிதம் நிறைந்த புண்ணிய தினமல்லவா. கட்சி வேறுபாடின்றி அந்தக் கலங்கரை விளக்குகளை, கார்த்திகைப் பூவுக்கு உரித்தான அந்தக் கருணைமிகு மறவர்களை தூபமிட்டுத் தீபமேற்றித் துதிபாடும் நாளல்லவா இந்தக் கார்த்திகை 27.
அரச பயங்கரவாதத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதும் ஓர் அறவழிப் போராட்டம்தான் என்பதை எமக்கும், உலகுக்கும் உணர்த்திய உன்னதப் பிறவிகளல்லவா இந்த மனித மாணிக்கங்கள். மனிதரூபத்தில் வந்து மாயாஜாலங்கள் புரிந்த எம் மந்திரவாதிகள். சாவிலும் வாழும் சந்ததி என்ற பெருமையை எமக்குத் தேடித்தந்த எம் காவலர்கள். இன்று நாம் பூஜிக்கும் எம் இதய தெய்வங்கள்.
அந்த மனித தெய்வங்களின் விந்தைமிகு செயல்களை, வீரம் செழிந்த நிகழ்வுகளை, பாசம் நிறைந்த பங்களிப்பை நினைவுகூரும் அதேவேளை, எம்மவர் வீரவரலாற்றை எமது இளைய தலை முறைக்கும் இயல், இசை, நாடக வடிவிலே எடுத்தியம்பி உணரவைக்கும் வாரமல்லவா இந்த மாவீரர் வாரம். ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒன்றுபட்டு பங்கு கொள்ளும் இந்த நிகழ்வு கட்சி பேதமின்றி தமிழர் என்ற ரீதியில் நடாத்தப்பட வேண்டிய ஓர் தமிழருக்கான புனித நாளல்லவா.
தேசியத் தலைவரும், மாவீரர்களும் நம் எல்லோருக்கும் உரியவர்கள் என்பதை உணர்ந்து எமது செயற்பாட்டை முன்னெடுப்பதுதானே முறை. அவர்களை உரிமை கொண்டாட எல்லோருக்கும் உரிமையுண்டு என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அந்த உரிமையை மறுக்கவோ அல்லது மட்டுப்படுத்தவோ எவருக்கும் உரிமையில்லை என்பதையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
அதேவேளை, போட்டிபோட்டு மாவீரர் கொள்கைக்கு எதிராக, ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் நாம் பிரிந்து செயற்படுவோமானால் அந்தத்தெய்வங்களை, அவர்கள் எமக்காகச் செய்த தியாகங்களை, அவர்களின் அர்ப்பணிப்புக்களை நாம் அவமதிப்பதாகவே அமைந்துவிடுமல்லவா.
உரியவர்களை உள்ளடக்கி, ஒற்றுமைக்கு வழிவகுக்கும் விதத்தில், ஒரு குடையின்கீழ் இந்நிகழ்வை நடாத்தி அந்த மனித மாணிக்கங்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வோமாக.
உடைந்த மனதுடன் மனிதசங்கிலியை உருவாக்கிய பாசம்மிகு பரம்பரையே!
மாவீரர் வாரம், ஒவ்வொரு வீட்டிலும் எம் தியாக தீபங்களுக்குத் தீபமேற்றித் தியானியுங்கள், சமயத் தலங்களுக்குச் சென்று அவர்களுக்காக வழிபடுங்கள், மாவீரர் தினம் நடைபெறும் இல்லங்களுக்குச் சென்று உங்கள் நன்றிக் கடனைச் செலுத்துங்கள்.
அதே வேளை, இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தனிநாட்டை விரைவில் அமைப்போமென மாவீரர்களை மதிக்கும் அத்தனை உறவுகளும் இன்றே சபதம் எடுத்து செயற்பட வேண்டும். ஒற்றுமை கலந்த கடமையுணர்வுடன் எமது இறுதிப் போரான அரசியல்ப் போரைக் காலம் கடத்தாது முடிவிற்குக் கொண்டுவர தேசியத் தலைவரின் இலட்சியப் பாதையில் பயணிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுடன் தாமதியாது இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.
உண்மையுடனும், உறுதியுடனும் உழைத்த கார்த்திகைப் பூவுக்கு உரித்தானவர்களின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழரும் உறுதிபூண்டு செயற்பட வேண்டும். இதுகண்டு, மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் மாவீரர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும்.
கலாநிதி ராம் சிவலிங்கம்
துணைப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு
r.sivalingam@tgte.org

ஜனநாயகத்தை பதிவுலகத்தால் மட்டுமே காப்பாற்ற இயலும். வாருங்கள் தோழர்களே!
ஜனநாயகத்தைக் காப்பதற்கும் பதிவுலகத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா ? இருக்கிறது.

தமிழ்நாட்டில் இன்று நான்காவது தூண் என்று அழைக்கப் படும் பத்திரிக்கை உலகம் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியுமா ?

சவுக்குக்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. 2006ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழக பத்திரிக்கை உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

பத்திரிக்கைகளின் கருத்துக்களை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்தும், தன்னையே ஒரு பத்திரிக்கையாளர் என்று அழைத்துக் கொள்ளும் கருணாநிதி, ஏறக்குறைய அனைத்து பத்திரிக்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் நாட்டில் வெளிரும் ஆங்கில பத்திரிக்கைகள் நான்கு. தி ஹிந்து, டெக்கான் க்ரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.
இந்த பத்திரிக்கைகளில் தி ஹிந்து, முரசொலியின் ஆங்கிலப் பதிப்பாக மாறி, பல ஆண்டுகள் ஆகின்றன.

இதற்கு குறிப்பான காரணம், 2003ம் ஆண்டில் ஹிந்து நாளிதழ் எழுதிய தலையங்கம், தமிழக சட்டசபையின் உரிமை மீறியதாக ஆணையிட்டு, அப்போதைய சபாநாயகர் காளிமுத்து, ஹிந்து நாளேட்டின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர் மற்றும், அந்த தலையங்கத்தை மொழி பெயர்த்து வெளியிட்ட முரசொலியின் நிர்வாகிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையொட்டி, அப்போது ஜெயலலிதாவுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்த காவல்துறை, உடனடியாக ராம், முரளி உள்ளிட்ட ஹிந்து நிர்வாகிகளை கைது செய்ய முனைந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, முன் பிணை பெற்றவுடன், அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில், ஜெயலலிதா மீது கடும் கோபம் கொண்ட ஹிந்து குழுமம், அந்நாள் முதல், ஹிந்து பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை மறந்து, கருணாநிதியின் ஊதுகுழல்களில் ஒன்றாக ஆனது.
இந்நாளேடு, ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எவ்வாறு செய்தி வெளியிட்டது என்பதும், இதற்காக, ஹிந்து ராமுக்கு இலங்கை அரசு லங்கா ரத்னா விருது வழங்கி கவுரவித்ததும் வரலாறு.

அடுத்து டெக்கான் க்ரானிக்கிள் நாளேடு. இந்நாளேடு, ஓரளவுக்கு நியாயமாக, பொதுமக்களின் பிரச்சினைகளையும், அரசின் தவறுகளையும் சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாகத்தான் இருந்து வந்தது. 2008 ஏப்ரல் 14 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னை பதிப்பு வெளிவந்தது. இந்நாளில், டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை விட வியாபார ரீதியில் பிரபலமாக வேண்டும் என்ற உந்துதலில், முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி,ஐஏஎஸ் மற்றும் முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் எஸ்.கே.உபாத்யாய் ஆகிய இருவருக்கிடையே நடைபெற்ற உரையாடலை வெளியிட்டது.

இந்த உரையாடல் வெளியாகி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பை ஒட்டி, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் சர்குலேஷன் பன்மடங்கு கூடியது. ஆனால், அந்த புகழுக்கு இந்த நாளேடு அளித்த விலை மிக அதிகம்.
முதலில், இந்நாளேட்டின் அலுவலகத்தை காவல்துறையை விட்டு சோதனை செய்து, எடிட்டரை கைது செய்யத் உத்தேசித்திருந்த கருணாநிதி, பத்திரிக்கைகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று சமயோசிதமாக யோசித்து, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்தினார். அரசு விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு செய்தித் தாள், தள்ளாடி தடுமாறும் என்பதை அறிந்த கருணாநிதி இவ்வாறு செய்தார். அதைப் போலவே, அந்நாளேடு தள்ளாடத் தொடங்கியது. விளம்பரத்தை நிறுத்தினால், ஒரு நாளுக்கு ஒரு செய்தித் தாளுக்கு ஏற்படும் நஷ்டம் என்ன தெரியுமா ?

குறைந்தது ரூபாய் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை. ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதை உலகத்தில் எந்த முதலாளி பொறுத்துக் கொள்வான் ? உலகில் உள்ள அத்தனை முதலாளிகளின் நோக்கமும் மூன்று விஷயங்கள் மட்டும் தான்.
1) லாபம்
2) லாபம்
3) லாபம்
இந்த லாபத்துக்காகத்தான் முதலாளிகள் தொழிலில் இறங்குகிறார்கள். அந்த லாபம் அடிபடத் தொடங்கினால் ? அரசின் காலில் முதலாளி மண்டியிடுவான். அதுதான் டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் கதையிலும் நடந்தது. உபாத்யாய் திரிபாதி தொலைபேசி உரையாடலை வெளியிட்ட டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் மூத்த நிருபர் வி.பி.ரகு, அநேகமாக வேலையை விட்டு டிஸ்மிஸ் ஆகும் நிலைக்கு தள்ளப் பட்டார்.

பிறகு, அரசோடு சமாதானம் ஆனபின் அரசுக்கு எதிராக செய்திகள் வருவது, ஏறக்குறைய நிறுத்தப் படும் என்ற உடன்பாட்டுக்குப் பிறகு, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு மீண்டும் அரசு விளம்பரங்கள் வழங்கப் பட்டன.
உடன்பாட்டுக்கு ஏற்ப, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், அரசை வெகுவாகச் சாடாமல் இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் தனது லாபத்துக்கு குறைவு ஏற்படாமல் இன்று செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
அடுத்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். இந்த நாளிதழ், எப்பொழுதுமே முதலாளிகள் மற்றும் முதலாளி வர்க்க சார்போடுதான் இருந்து வந்திருக்கிறது.

ஒரு பத்து பேர், உணவில்லாமல் பட்டினியால் சாக நேரிடும் ஒரு செய்தியையும், இந்திய அரசின் பொருளாதார கொள்கையால், பெரும் நிறுவனங்களுக்கு லாபத்தில் குறைவு ஏற்படும் ஒரு செய்தியையும் ஒப்பிட்டால், லாபத்தில் ஏற்படும், குறைபாட்டைத் தான் இந்நாளேடு பெரிதாக வெளியிடும்.
இது போல, தன்னுடைய முதலாளித்துவச் சார்பை சமன் செய்வதற்காக அவ்வப்பொழுது இங்கும் அங்கும் ஒரு ஏழையின் கஷ்டத்தை பற்றிச் செய்தி வெளியிட்டு நடுநிலையான நாளேடு போல காட்டிக் கொள்ளும். இந்நாளேட்டின் உரிமையாளர், இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிறுவனத்தின் இந்தியா டைம்ஸ் இணையத் தளம், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அனைத்திலும், இந்த முதலாளித்துவச் சார்பை காணலாம். இந்தியா டைம்ஸ் இணைய தளத்தில் அதிகம் பேர் விரும்பிப் பார்க்கும், கவர்ச்சிப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
எஞ்சியுள்ளது, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு மட்டுமே. இந்நாளேடாவது நடுநிலையாக இருக்குமென்றால் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதாவை விமர்சித்து வரும் செய்திகளை பூதக்கண்ணாடி வைத்தாலும் காண முடியாது. சரி, ஆளுங்கட்சியை எதிர்ப்பதுதான், உண்மையான பத்திரிக்கை தர்மம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, சமீப காலமாக, இப்பத்திரிக்கையில், அரசுக்கு எதிராக வரும் செய்திகள் குறைந்த வண்ணம் உள்ளன.
பத்திரிக்கை உலகில் விபரம் அறிந்தவர்கள், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதலாளி, கருணாநிதியை வெகு சமீபத்தில் சந்தித்ததாகவும், அச்சந்திப்பின் போது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் கருணாநிதி குடும்பத்தையும், கருணாநிதியையும், விமரிசித்து, தலையங்கப் பகுதிக்கு அருகில் வரும் கட்டுரைகள் மிகக் கடுமையாக இருப்பதாகவும், கருணாநிதி அங்கலாய்த்ததாக கூறப் படுகிறது.
இந்த அங்கலாய்ப்பின் விளைவாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அரசுக்கு எதிரான செய்திகளை குறைத்துக் கொள்ள எக்ஸ்பிரஸ் குழுமம் முடிவெடுத்திருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள நான்கு ஆங்கிலப் பத்திரிக்கைகளும் கருணாநிதியின் பிடியில் வந்து விட்டதல்லவா ? அடுத்து தமிழ் தினசரிகளைப் பார்ப்போம்.

தினமணி நாளேட்டின் தலையங்கங்கள் கடுமையான விமர்சனத்தை தாங்கி வந்தன. கருணாநிதி அரசின் அயோக்கியத்தனங்களை தினமணி தொடர்ந்து சாடியே வந்துள்ளது.
இவ்வாறு கடும் விமர்சனங்களை அடக்கிய தலையங்கம் வந்தபோதெல்லாம் அந்நாளேட்டின் ஆசிரியரை, பார்ப்பனர் என்றும், காதில் கேட்கக் கூசும் வார்த்தைகளால், காலை 6 மணி முதல் 8 மணி வரை கருணாநிதி அர்ச்சனை செய்வதுண்டு என்று, இந்த அர்ச்சனைகளை காதில் கேட்டவர்கள் கூறுகிறார்கள்.
இப்படியெல்லாம் அர்ச்சனை செய்தாலும், கருணாநிதியை பாராட்டி வரும் செய்திகளை “தினமணி நாளேடே கூறியுள்ளது“ என்று அதை எடுத்து முரசொலியில் பெரிய செய்தியாக வெளியிட கருணாநிதி தயங்கும் அளவுக்கு அவருக்கு சுயமரியாதை இல்லை.

பச்சை நிறத்தில் இல்லையே ஒழிய, கருணாநிதிக்கு பச்சோந்திக்கு உண்டான அத்தனை குணநலன்களும் உண்டு. கடந்த ஆண்டு கருணாநிதி பிறந்தநாளின் போது அவரை வாழ்த்தி தினமணி எழுதிய தலையங்கத்தை, கருணாநிதி விழா மேடையில் ஒரு வரி விடாமல் படித்தது குறிப்பிடத் தகுந்தது.
தலையங்கங்களைத் தவிர, தினமணியில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம், நடுப்பக்கத்தில் வரும் கட்டுரைகள்.

கட்டுரையாசிரியர் பழ.கருப்பையாவைத் தவிர அக்கட்டுரைகளில் கருணாநிதியை கடுமையாக விமரிசனம் செய்வது அரிதிலும் அரிதான விஷயம். எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கும் அரசிற்கும் ஏற்பட்ட உடன் பாட்டின் விளைவுகள், அக்குழுமத்திலேயே இருக்கும் தினமணியை மட்டும் பாதிக்காதா என்ன ?
அதன் விளைவு, சமீப காலமாக பழ.கருப்பையா காணாமல் போய் விட்டார். நேற்று எழுதிய கட்டுரையில் கூட, ஏசு பிரானைப் பற்றித் தான் பழ.கருப்பையா எழுதியிருக்கிறார். தினமணியின் தலையங்கங்கள் கூட, தமிழக அரசை தொடாமல், இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சுற்றி வருகின்றன.
கருணாநிதிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த தினமணியை ஒரு வழியாக சரிக்கட்டியாகி விட்டது.
அடுத்து கருணாநிதியை தொடர்ந்து விமர்சித்து, தொல்லை கொடுத்து வந்த ஒரு நாளிதழ் தினமலர்.
முதலில், தினமலர் குழுமத்தில் ஏற்பட்ட குடும்பச் சண்டையை தனது உளவுத் துறை மூலம் பெரிதாக்கி அந்நெருப்பில் குளிர் காய்ந்தார் கருணாநிதி.

அதற்குப் பிறகும் சென்னை தினமலரின் விமர்சனங்கள் குறையாததால், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பனங்காட்டு நரியான கருணாநிதி. அருமையான சந்தர்ப்பத்தை தினமலர் நாளேடே ஏற்படுத்திக் கொடுத்தது.
ஊரில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் பற்றி எழுதிக் கிழித்து விட்டது போல, தமிழ் திரைப்படங்களின் முன்னாள் கதாநாயகிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்று, சில முன்னாள் முன்னணி நடிகைகளின் புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டது தினமலர்.

உண்மையிலேயே அந்நடிகைகள் பாலியல் தொழில் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அதனால் யாருடைய சோற்றில் மண் விழுந்தது ? ஆனால், இதை ஒரு மிகப் பெரிய சமுதாய பிரச்சினையாக்கி பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தது தினமலர்.

“மயிர் நீக்கின் உயிர் வாழா கவரிமான்“ குடும்பத்தைச் சேர்ந்தவர்களான திரைத் துறையினர் மிகப்பெரிய கூத்தை போராட்டம் என்ற பெயரில் நடத்தினார்கள்.
அவ்வளவுதான் கருணாநிதிக்கு வந்ததே கோபம் !
தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது போலவும், இனி தீர்க்க வேறு பிரச்சினைகளே இல்லை என்பது போலவும், உடனடியாக “பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தின்“ கீழ் காவல்துறையை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.
சட்டத்தின் படி, அவதூறான செய்தி வெளியிடும் பத்திரிக்கையின் ஆசிரியரும், பதிப்பாளரும் (முதலாளி) தான் வழக்கமாக கைது செய்யப் படுவார்கள்.
ஆனால், தினமலர் முதலாளிகளோடு, ஒரு “கள்ள ஒப்பந்தத்தை“ கருணாநிதி செய்து கொண்டு அந்நாளேட்டின் செய்தி ஆசிரியர் லெனினை காவல்துறையை வைத்து கைது செய்தார் கருணாநிதி.

தினமலர் நிர்வாகமும், சந்தோஷமாக லெனினை காவல்துறையோடு அனுப்பி வைத்தது.
பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் கைதேர்ந்த கபட வேடதாரி கருணாநிதி, லெனின் கைதால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பை சமாளிக்க, லெனின் பிணை மனுவுக்கு நீதிமன்றத்தில் அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க உத்தரவிட்டார்.
மறுநாளே லெனின் சிறையிலிருந்து வெளியே வந்தார். முதலாளியை கைது செய்யாமல் செய்தி ஆசிரியரை கைது செய்ததற்கு நன்றியாக தினமலர், இன்று தனது அரசு எதிர்ப்பு செய்திகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
வழக்கமாக, காரசாரமாக, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரைப் பற்றிய செய்திகளை தாங்கி வரும் தினமலரின் “டீக்கடை பென்ச்“ பகுதி கூட, உப்புச் சப்பில்லாமல் வருகிறது.
தமிழகத்தின் மிகப் பெரிய நாளிதழான தினத்தந்தியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

20 பேர் இறந்த விபத்துச் செய்தியை சின்னதாக போட்டு விட்டு, நடிகையின் உள்பாவாடை காணாமல் போன செய்தியை தலைப்புச் செய்தியாக போடும் நாளிதழ்.
இதற்கு, மக்கள் நடிகையின் உள்பாவாடை பற்றித் தான் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற வியாக்கியானம் வேறு.
எப்போதும் தினத்தந்தி ஒரு கட்சி சார்பாகவே இருந்து வந்திருக்கிறது. அதிசயிக்காதீர்கள். அந்த ஒரு கட்சி வேறு எந்தக் கட்சியும் அல்ல. “ஆளும் கட்சி“தான் அது.
அடுத்து எஞ்சியிருப்பது, தினகரன் தான். குடும்பம் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, தினகரன் நிருபர்கள் அரசுக்கு எதிரான செய்திகளுக்காக ஆலாய்ப் பறப்பார்கள்.

குடும்பம் ஒன்று சேர்ந்ததும், அரசுக்கெதிரான செய்திகள் அடியில் போடப்பட்டு, கருணாநிதியின் அறிக்கைகளும், பாராட்டுகளும் முதல் பக்கத்தில் வருகின்றன.
இதில் ஜெயலலிதாவின் அறிக்கைகளை சின்னதாக வெளியிட்டு நடுநிலையாக இருப்பதாக வேறு காட்டிக் கொள்கிறார்கள். குடும்பம் சண்டையில் இருந்த காலத்தில், தினகரன் நாளேடு, அரசு விளம்பரம் வருவதில்லை என்று, நீதிமன்றம் சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.
எவ்வளவுதான் பணம் கொட்டிக் கிடந்தாலும், சன் டிவி குழுமத்தின் வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டினாலும், விளம்பர வருமானம் குறைந்தவுடன் நீதிமன்றம் செல்லும் பத்திரிக்கை முதலாளிகளின் கவலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் தமிழ் ஓசை நாளேட்டை, டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி தவிர ஒருவரும் படிப்பதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அன்புமணி ராமதாஸ் கூட ஹிந்து தான் படிக்கிறாராம்.
இதைத் தவிர சொல்லிக் கொள்ளும் படி ஒரு நாளிதழும் இல்லை.
வாரம் இருமுறை இதழ்களை எடுத்துக் கொண்டால், நக்கீரனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா அரசாங்கத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டதால், நக்கீரன் பத்திரிக்கையில் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு ஜெயலலிதா மீது ஏற்பட்ட வெறுப்பு ஜெயலலிதாவை ஹிட்லர், முசோலினி போன்ற ஒரு கொடுங்கோலர் போலவும், கருணாநிதியை ஏசு பிரான் போலவும் எண்ண வைத்தது.
இதன் விளைவு, நக்கீரன் அறிவாலயத்தில் அச்சடிக்கப் படுவது போலவே செய்திகளைத் தாங்கி வருகிறது. மேலும், இப்பத்திரிக்கை, உளவுத் துறையின் ஒரு மூத்த அதிகாரியின் பிடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இப்பத்திரிக்கையின் இணை ஆசிரியராக இருக்கும் காமராஜ், கருணாநிதிக்கு மிக மிக நெருக்கமாக உள்ளதால், கருணாநிதியின் எண்ணங்களே நக்கீரனில் செய்தியாக வருவதாக கூறப்படுகிறது.
ஈழப் போரின் போது ஈழச் செய்திகளை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்த நக்கீரன், தற்போழுது, ஈழப் போரை வழிநடத்தியவர் போலவும், பிரபாகரனுக்கே போர் முறைகளை கற்றுக் கொடுத்தவர் போலவும் பேசி வரும், போலிச் சாமியார் ஜெகத் கஸ்பர் எழுதும் தொடரை வெளியிட்டு வருகையிலேயே நக்கீரனின் அருமை புரியும்.
அடுத்து ஜுனியர் விகடன். மக்கள் மத்தியில் ஒரு நற்பெயரை பெற்றிருந்த இந்த இதழ், காவல்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்கி, நடுநிலையான பத்திரிக்கை என்ற பெயரை ஏறக்குறைய இழந்து நிற்கிறது.

குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளின் ஊழல்களை தைரியமாக அம்பலப்படுத்தி வந்த இந்த இதழ், தற்போது, காவல்துறை அதிகாரிகளின் புகழ் பாடும் பத்திரிக்கையாக உருமாற்றம் பெற்றுள்ளது.
மேலும், விகடன் குழுமம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கத் தொடங்கியதும், பத்திரிக்கையை விட, திரைப்படத்தில் இக்குழுமத்தின் முதலாளிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா என்ற மாய உலகம் காட்டிய கவர்ச்சியில் இக்குழுமத்தின் மேல்மட்ட நிர்வாகிகள் மயங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில ஆண்டுகளாக செக்ஸ் கதைகளை வெளியிடாமல் இருந்த ஜுனியர் விகடன், சமீப காலமாக செக்ஸ் கதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜுனியர் விகடன் புண்ணியத்தில், காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் நீலப்படம் இல்லாத செல்போனே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இலங்கை சென்று, ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி, சிரித்துப் பேசி, விருந்துண்டு, பரிசுகள் அளித்து, பெற்று, இந்தியா திரும்பியுள்ள திருமாவளவனை வைத்து “முள்வலி“ என்ற தலைப்பில் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களை பற்றி எழுத வைத்து, ஈழத் தமிழருக்காக இன்னும் மிச்சம் உள்ள இரக்கத்தை வியாபாரம் செய்து லாபம் பார்த்து வருகிறது இந்த இதழ்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது “வேட்பாளர் தம்பட்டம்“ என்ற தலைப்பில் விளம்பரங்கள் வெளியிட்டு, ஜுனியர் விகடன் கொள்ளை லாபம் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பக்க விளம்பரத்துக்காக, இரண்டு லட்சம் என்று விலை பேசி, மார்க்கெடிங் செய்ய அனைத்து அரசியல் கட்சிகளிடமும், வேட்பாளர்களிடமும், ஜுனியர் விகடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் இருமுறை இதழ், “குமுதம் ரிப்போர்ட்டர்“. இந்த பத்திரிக்கை அரசு, அரசியல் செய்திகள் என்றெல்லாம் ரொம்பவும் மெனக்கிடுவதில்லை.

எல்லா பத்திரிக்கைகளின் குறிக்கோளும் லாபம் என்றாலும், குமுதம் ரிப்போர்ட்டரின் குறிக்கோள், எப்படியாவது லாபம் என்பதுதான். இப்பத்திரிக்கை எப்போதும் கையாளும் ஒரு முக்கிய தந்திரம் “செக்ஸ்“.
செக்ஸ் தொடர்பாக எந்த செய்தி இருந்தாலும் அதை அட்டையில் போட்டு, அந்த இதழுக்கு கூடுதலாக 4 அல்லது 5 லட்ச ரூபாய் லாபம் பார்ப்பதுதான் இந்த இதழுக்கு வழக்கம்.
“பள்ளி மாணவிகளிடம் உலவும் செக்ஸ் வீடியோ“, “டேட்டிங் செய்யும் இளசுகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்“, “பெருகி வரும் கள்ள உறவுகள்“ “செக்ஸ் வீடியோவில் மாட்டிய எம்.எல்.ஏ“ செக்ஸ் படம் காட்டும் இணையத் தளங்கள்“ “மீண்டும் சரோஜாதேவி கதைகள் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்” என்ற ரீதியில் தான் இந்த இதழின் தலைப்புச் செய்திகள் இருக்கும்.
ஒரு வாரத்துக்கு செக்ஸ் செய்தி கிடைக்க வில்லை என்றால் “நான் ஸ்டாலினுக்கு போட்டியா ? அழகிரி அதிர்ச்சிப் பேட்டி“ அல்லது “நான் யாருக்கும் இளைத்தவன் இல்லை – விஜயகாந்த் உற்சாகப் பேட்டி“ என்று இதழை ஓட்டி விடுவார்கள்.
இது தவிர, இந்நிறுவனத்தின் முதலாளியின் 1500 ஏக்கர் நிலம் சென்னையை அடுத்து இருப்பதாகவும், இந்நிலத்தை, காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் மேற்பார்வை செய்து பிரச்சினைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும், இதனால், அந்த அதிகாரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறித்த செய்திகள் எதுவும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வரும் வார இதழ் “தமிழன் எக்ஸ்பிரஸ்“. இந்த இதழை டீக்கடையில் போண்டா மடிப்பதற்குக் கூட பயன் படுத்துவதில்லை என்று கூறப் படுகிறது.

வருமான வரியில் நஷ்டம் காட்டுவதற்காகத்தான் இந்த இதழை எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சியுள்ளது, வெளிவந்து ஒரு வருடம் ஆன “தமிழக அரசியல்“ வார இதழ். அரசுக்கு எதிரான செய்திகள் ஓரளவுக்கு வந்தாலும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு இந்த இதழ் செயல்படுகிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இந்த இதழில் வெளிவரும் செய்திகள் அரசின் மீது விமரிசனம் செய்யும் தொனியில் இருந்தாலும் துணை முதல்வருக்கு, ஏறக்குறைய சாமரம் வீசும் வகையில் தான் இருக்கிறது. சமீபத்தில் ஸ்டாலின் பற்றி வெளிவந்த ஒரு கட்டுரையில், ஸ்டாலினுக்கு பக்குவம் போதாது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
எதற்காக என்றால், ஒரு அதிகாரி ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஊழல் இருந்தது என்று குறிப்பிட்டாராம். உடனடியாக ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட்டாராம். உடனடியாக இன்னொரு அதிகாரி பதறிப்போய், இந்த விஷயத்துக்கு ஒப்புதல் கொடுத்தது முதல்வர் கருணாநிதிதான், விசாரணை நடந்தால் அது அரசின் மீதே திரும்பும் என்பதால் விசாரணை வேண்டாம் என்று கூறினாராம்.
இது போல, ஒரு ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதால் ஸ்டாலினுக்கு பக்குவம் இல்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஊழல்களை மூடி மறைக்க ஸ்டாலின் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள் ? ஒரு வேளை எப்படியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.
இப்போதே ஸ்டாலினுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து நாளை ஸ்டாலின் முதல்வரானால், நாங்கள்தான் உங்களை முதல்வர் ஆக்க உத்தரவிட்டோம், அதனால் வாரம் 20 பக்கத்துக்கு அரசு விளம்பரம் தாருங்கள் என்று கேட்கலாமென, தமிழக அரசியல் நிர்வாகம் திட்டமிட்டுருக்கிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது.
இது போகவும், தமிழக அரசியல் நிர்வாகமும், தமிழக அரசியல் தவிர, திரிசக்தி என்ற ஆன்மீக பத்திரிக்கை, திரைப்படத் தயாரிப்பு என்று பல தொழில்கள் செய்து வருவதால் தமிழக அரசியல் பத்திரிக்கையை சீரியசாக நடத்துவது போலத் தெரியவில்லை.
முக்கிய அரசியல் பத்திரிக்கைகள் அனைத்தையும் பார்த்தாயிற்று. மற்ற வார, மாத இதழ்களுக்கு, அரசியல் ஒரு சிறு பகுதிதான் என்பதால், கருணாநிதி இவைகளை கண்டு கொள்வதில்லை.
தொலைக்காட்சி ஊடகங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை விளக்கத் தேவையில்லை. தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் மக்கள் அப்படியே உண்மை என்று நம்பும் காலம் மலையேறி விட்டது. பின்னே, விஜயின் வேட்டைக்காரன் படத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று சன் நியூஸில் அரை மணிக்கொரு முறை சொன்னால், மக்கள் சிரிக்க மாட்டார்கள் ?
பெரும்பாலான தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குவதால், அவற்றில் உண்மை செய்திகளை காண்பது கடினமாக இருக்கிறது.
இந்நிலையில், ஒரு ஜனநாயகத்துக்கு, சுதந்திரமான பத்திரிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லையென்றால், ஹிட்லரின் தளபதி, கோயபல்ஸ் பத்து முறை ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று கூறியது, இப்பொழுது இருக்கும் பத்திரிக்கைளால் நடைமுறைக்கு வந்து விடும்.
சரி. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. விமர்சனங்களே அவசியம் இல்லை என்றால் அதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சிறப்பாக நடக்கும் ஆட்சி கூட, தவறுகள் இழைக்கக் கூடும். அந்தத் தவறுகளை சுட்டிக் காட்டி, அந்த ஆட்சியை மேலும் சிறப்பாக நடத்த பத்திரிக்கைகள் அவசியம்.
அப்படிப்பட்ட சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லாது போனால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவாகும். ஜனநாயகம் என்பது, தானாக வாடி, வதங்கி, உதிர்ந்து விடும்.
தமிழ்நாட்டில், பத்திரிக்கைகள் ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் திறன், பதிவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த பதிவுலகம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. இங்கே எழுத்துச் சுதந்திரம் உண்டு.
நியாயமாக எழுதினால், நம்மை வேலையை விட்டு அனுப்பி விடும் முதலாளியும் இல்லை, அரசுக்கு எதிராக எழுதினால், விளம்பரம் வராதே என்று கவலைப்படும் வியாபார நெருக்கடியும் இல்லை.
நமது பதிவுலகத்தில் பெரும்பாலான பதிவுகள் செய்தித் தாள்களில் வருபவற்றை மறு பதிவு செய்பவையாகவும், சினிமா செய்திகளை பெரிது படுத்துவதாகவும் உள்ளன.
இப்பதிவுலகத்தை, இந்த அரசில் ஏற்பட்டு வரும் ஊழல்களை வெளிக் கொணர சுதந்திரமான ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு இயந்திரத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் அரசு ஊழியர்களே !. அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலில், புறங்கையை நக்காமல், ஊழலை எதிர்க்க திராணியும் இல்லாமல் வெளியே சொல்ல இயலாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் போராளிகளே.
உங்களுக்குத் தெரிந்த ஊழல்களை, இந்த பதிவுலகத்தில் வெளியிடுங்கள்.
முக்கிய செய்திகளை ஆசிரியருக்கு அனுப்பி, அது பிரசுரமாகாததால் மனம் புழுங்கும் பத்திரிக்கையாளர்களே. பதிவுலகிற்கு வாருங்கள்.
பதிவர்களே சீரியசான பதிவுகளை எழுதுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். இந்தப் பத்திரிக்கைகள் செய்யத் தவறுவதை நாம் செய்வோம்.
இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தப் பொறுப்பை தவற விட்டால், நம் கண் முன்னே, இந்த ஜனநாயகம் செத்து மடிவதை காணும் கொடுமைக்கு ஆளாவோம்.
ஜனநாயகத்தை பதிவுலகத்தால் மட்டுமே காப்பாற்ற இயலும். வாருங்கள் தோழர்களே!
எழுத்தாளர் சவுக்கு

டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் விளம்பரப் பலகை

பழ.கருப்பையா

சர்ச்சைக்குரிய தினமலர் செய்தி
உண்மையிலேயே அந்நடிகைகள் பாலியல் தொழில் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அதனால் யாருடைய சோற்றில் மண் விழுந்தது ? ஆனால், இதை ஒரு மிகப் பெரிய சமுதாய பிரச்சினையாக்கி பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தது தினமலர்.

நடிகர் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு
“மயிர் நீக்கின் உயிர் வாழா கவரிமான்“ குடும்பத்தைச் சேர்ந்தவர்களான திரைத் துறையினர் மிகப்பெரிய கூத்தை போராட்டம் என்ற பெயரில் நடத்தினார்கள்.
அவ்வளவுதான் கருணாநிதிக்கு வந்ததே கோபம் !
தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது போலவும், இனி தீர்க்க வேறு பிரச்சினைகளே இல்லை என்பது போலவும், உடனடியாக “பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தின்“ கீழ் காவல்துறையை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.
சட்டத்தின் படி, அவதூறான செய்தி வெளியிடும் பத்திரிக்கையின் ஆசிரியரும், பதிப்பாளரும் (முதலாளி) தான் வழக்கமாக கைது செய்யப் படுவார்கள்.
ஆனால், தினமலர் முதலாளிகளோடு, ஒரு “கள்ள ஒப்பந்தத்தை“ கருணாநிதி செய்து கொண்டு அந்நாளேட்டின் செய்தி ஆசிரியர் லெனினை காவல்துறையை வைத்து கைது செய்தார் கருணாநிதி.

தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப் படுகையில்
தினமலர் நிர்வாகமும், சந்தோஷமாக லெனினை காவல்துறையோடு அனுப்பி வைத்தது.
பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் கைதேர்ந்த கபட வேடதாரி கருணாநிதி, லெனின் கைதால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பை சமாளிக்க, லெனின் பிணை மனுவுக்கு நீதிமன்றத்தில் அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க உத்தரவிட்டார்.
மறுநாளே லெனின் சிறையிலிருந்து வெளியே வந்தார். முதலாளியை கைது செய்யாமல் செய்தி ஆசிரியரை கைது செய்ததற்கு நன்றியாக தினமலர், இன்று தனது அரசு எதிர்ப்பு செய்திகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
வழக்கமாக, காரசாரமாக, அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினரைப் பற்றிய செய்திகளை தாங்கி வரும் தினமலரின் “டீக்கடை பென்ச்“ பகுதி கூட, உப்புச் சப்பில்லாமல் வருகிறது.
தமிழகத்தின் மிகப் பெரிய நாளிதழான தினத்தந்தியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

20 பேர் இறந்த விபத்துச் செய்தியை சின்னதாக போட்டு விட்டு, நடிகையின் உள்பாவாடை காணாமல் போன செய்தியை தலைப்புச் செய்தியாக போடும் நாளிதழ்.
இதற்கு, மக்கள் நடிகையின் உள்பாவாடை பற்றித் தான் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்ற வியாக்கியானம் வேறு.
எப்போதும் தினத்தந்தி ஒரு கட்சி சார்பாகவே இருந்து வந்திருக்கிறது. அதிசயிக்காதீர்கள். அந்த ஒரு கட்சி வேறு எந்தக் கட்சியும் அல்ல. “ஆளும் கட்சி“தான் அது.
அடுத்து எஞ்சியிருப்பது, தினகரன் தான். குடும்பம் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, தினகரன் நிருபர்கள் அரசுக்கு எதிரான செய்திகளுக்காக ஆலாய்ப் பறப்பார்கள்.

குடும்பம் ஒன்று சேர்ந்ததும், அரசுக்கெதிரான செய்திகள் அடியில் போடப்பட்டு, கருணாநிதியின் அறிக்கைகளும், பாராட்டுகளும் முதல் பக்கத்தில் வருகின்றன.
இதில் ஜெயலலிதாவின் அறிக்கைகளை சின்னதாக வெளியிட்டு நடுநிலையாக இருப்பதாக வேறு காட்டிக் கொள்கிறார்கள். குடும்பம் சண்டையில் இருந்த காலத்தில், தினகரன் நாளேடு, அரசு விளம்பரம் வருவதில்லை என்று, நீதிமன்றம் சென்றதை நினைவில் கொள்ள வேண்டும்.
எவ்வளவுதான் பணம் கொட்டிக் கிடந்தாலும், சன் டிவி குழுமத்தின் வருமானம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டினாலும், விளம்பர வருமானம் குறைந்தவுடன் நீதிமன்றம் செல்லும் பத்திரிக்கை முதலாளிகளின் கவலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் தமிழ் ஓசை நாளேட்டை, டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி தவிர ஒருவரும் படிப்பதில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. அன்புமணி ராமதாஸ் கூட ஹிந்து தான் படிக்கிறாராம்.
இதைத் தவிர சொல்லிக் கொள்ளும் படி ஒரு நாளிதழும் இல்லை.
வாரம் இருமுறை இதழ்களை எடுத்துக் கொண்டால், நக்கீரனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா அரசாங்கத்தில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டதால், நக்கீரன் பத்திரிக்கையில் ஆசிரியர் நக்கீரன் கோபால் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு ஜெயலலிதா மீது ஏற்பட்ட வெறுப்பு ஜெயலலிதாவை ஹிட்லர், முசோலினி போன்ற ஒரு கொடுங்கோலர் போலவும், கருணாநிதியை ஏசு பிரான் போலவும் எண்ண வைத்தது.
இதன் விளைவு, நக்கீரன் அறிவாலயத்தில் அச்சடிக்கப் படுவது போலவே செய்திகளைத் தாங்கி வருகிறது. மேலும், இப்பத்திரிக்கை, உளவுத் துறையின் ஒரு மூத்த அதிகாரியின் பிடியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இப்பத்திரிக்கையின் இணை ஆசிரியராக இருக்கும் காமராஜ், கருணாநிதிக்கு மிக மிக நெருக்கமாக உள்ளதால், கருணாநிதியின் எண்ணங்களே நக்கீரனில் செய்தியாக வருவதாக கூறப்படுகிறது.
ஈழப் போரின் போது ஈழச் செய்திகளை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்த்த நக்கீரன், தற்போழுது, ஈழப் போரை வழிநடத்தியவர் போலவும், பிரபாகரனுக்கே போர் முறைகளை கற்றுக் கொடுத்தவர் போலவும் பேசி வரும், போலிச் சாமியார் ஜெகத் கஸ்பர் எழுதும் தொடரை வெளியிட்டு வருகையிலேயே நக்கீரனின் அருமை புரியும்.
அடுத்து ஜுனியர் விகடன். மக்கள் மத்தியில் ஒரு நற்பெயரை பெற்றிருந்த இந்த இதழ், காவல்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்கி, நடுநிலையான பத்திரிக்கை என்ற பெயரை ஏறக்குறைய இழந்து நிற்கிறது.

குறிப்பாக, காவல்துறை அதிகாரிகளின் ஊழல்களை தைரியமாக அம்பலப்படுத்தி வந்த இந்த இதழ், தற்போது, காவல்துறை அதிகாரிகளின் புகழ் பாடும் பத்திரிக்கையாக உருமாற்றம் பெற்றுள்ளது.
மேலும், விகடன் குழுமம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கத் தொடங்கியதும், பத்திரிக்கையை விட, திரைப்படத்தில் இக்குழுமத்தின் முதலாளிகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமா என்ற மாய உலகம் காட்டிய கவர்ச்சியில் இக்குழுமத்தின் மேல்மட்ட நிர்வாகிகள் மயங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில ஆண்டுகளாக செக்ஸ் கதைகளை வெளியிடாமல் இருந்த ஜுனியர் விகடன், சமீப காலமாக செக்ஸ் கதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஜுனியர் விகடன் புண்ணியத்தில், காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதனின் நீலப்படம் இல்லாத செல்போனே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
இலங்கை சென்று, ராஜபக்ஷேவுடன் கைகுலுக்கி, சிரித்துப் பேசி, விருந்துண்டு, பரிசுகள் அளித்து, பெற்று, இந்தியா திரும்பியுள்ள திருமாவளவனை வைத்து “முள்வலி“ என்ற தலைப்பில் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களை பற்றி எழுத வைத்து, ஈழத் தமிழருக்காக இன்னும் மிச்சம் உள்ள இரக்கத்தை வியாபாரம் செய்து லாபம் பார்த்து வருகிறது இந்த இதழ்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது “வேட்பாளர் தம்பட்டம்“ என்ற தலைப்பில் விளம்பரங்கள் வெளியிட்டு, ஜுனியர் விகடன் கொள்ளை லாபம் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பக்க விளம்பரத்துக்காக, இரண்டு லட்சம் என்று விலை பேசி, மார்க்கெடிங் செய்ய அனைத்து அரசியல் கட்சிகளிடமும், வேட்பாளர்களிடமும், ஜுனியர் விகடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் இருமுறை இதழ், “குமுதம் ரிப்போர்ட்டர்“. இந்த பத்திரிக்கை அரசு, அரசியல் செய்திகள் என்றெல்லாம் ரொம்பவும் மெனக்கிடுவதில்லை.
எல்லா பத்திரிக்கைகளின் குறிக்கோளும் லாபம் என்றாலும், குமுதம் ரிப்போர்ட்டரின் குறிக்கோள், எப்படியாவது லாபம் என்பதுதான். இப்பத்திரிக்கை எப்போதும் கையாளும் ஒரு முக்கிய தந்திரம் “செக்ஸ்“.
செக்ஸ் தொடர்பாக எந்த செய்தி இருந்தாலும் அதை அட்டையில் போட்டு, அந்த இதழுக்கு கூடுதலாக 4 அல்லது 5 லட்ச ரூபாய் லாபம் பார்ப்பதுதான் இந்த இதழுக்கு வழக்கம்.
“பள்ளி மாணவிகளிடம் உலவும் செக்ஸ் வீடியோ“, “டேட்டிங் செய்யும் இளசுகள் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்“, “பெருகி வரும் கள்ள உறவுகள்“ “செக்ஸ் வீடியோவில் மாட்டிய எம்.எல்.ஏ“ செக்ஸ் படம் காட்டும் இணையத் தளங்கள்“ “மீண்டும் சரோஜாதேவி கதைகள் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்” என்ற ரீதியில் தான் இந்த இதழின் தலைப்புச் செய்திகள் இருக்கும்.
ஒரு வாரத்துக்கு செக்ஸ் செய்தி கிடைக்க வில்லை என்றால் “நான் ஸ்டாலினுக்கு போட்டியா ? அழகிரி அதிர்ச்சிப் பேட்டி“ அல்லது “நான் யாருக்கும் இளைத்தவன் இல்லை – விஜயகாந்த் உற்சாகப் பேட்டி“ என்று இதழை ஓட்டி விடுவார்கள்.
இது தவிர, இந்நிறுவனத்தின் முதலாளியின் 1500 ஏக்கர் நிலம் சென்னையை அடுத்து இருப்பதாகவும், இந்நிலத்தை, காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் மேற்பார்வை செய்து பிரச்சினைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும், இதனால், அந்த அதிகாரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறித்த செய்திகள் எதுவும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வரும் வார இதழ் “தமிழன் எக்ஸ்பிரஸ்“. இந்த இதழை டீக்கடையில் போண்டா மடிப்பதற்குக் கூட பயன் படுத்துவதில்லை என்று கூறப் படுகிறது.

வருமான வரியில் நஷ்டம் காட்டுவதற்காகத்தான் இந்த இதழை எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சியுள்ளது, வெளிவந்து ஒரு வருடம் ஆன “தமிழக அரசியல்“ வார இதழ். அரசுக்கு எதிரான செய்திகள் ஓரளவுக்கு வந்தாலும் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு இந்த இதழ் செயல்படுகிறதா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

இந்த இதழில் வெளிவரும் செய்திகள் அரசின் மீது விமரிசனம் செய்யும் தொனியில் இருந்தாலும் துணை முதல்வருக்கு, ஏறக்குறைய சாமரம் வீசும் வகையில் தான் இருக்கிறது. சமீபத்தில் ஸ்டாலின் பற்றி வெளிவந்த ஒரு கட்டுரையில், ஸ்டாலினுக்கு பக்குவம் போதாது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
எதற்காக என்றால், ஒரு அதிகாரி ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஊழல் இருந்தது என்று குறிப்பிட்டாராம். உடனடியாக ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட்டாராம். உடனடியாக இன்னொரு அதிகாரி பதறிப்போய், இந்த விஷயத்துக்கு ஒப்புதல் கொடுத்தது முதல்வர் கருணாநிதிதான், விசாரணை நடந்தால் அது அரசின் மீதே திரும்பும் என்பதால் விசாரணை வேண்டாம் என்று கூறினாராம்.
இது போல, ஒரு ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதால் ஸ்டாலினுக்கு பக்குவம் இல்லை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஊழல்களை மூடி மறைக்க ஸ்டாலின் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள் ? ஒரு வேளை எப்படியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்.
இப்போதே ஸ்டாலினுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து நாளை ஸ்டாலின் முதல்வரானால், நாங்கள்தான் உங்களை முதல்வர் ஆக்க உத்தரவிட்டோம், அதனால் வாரம் 20 பக்கத்துக்கு அரசு விளம்பரம் தாருங்கள் என்று கேட்கலாமென, தமிழக அரசியல் நிர்வாகம் திட்டமிட்டுருக்கிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது.
இது போகவும், தமிழக அரசியல் நிர்வாகமும், தமிழக அரசியல் தவிர, திரிசக்தி என்ற ஆன்மீக பத்திரிக்கை, திரைப்படத் தயாரிப்பு என்று பல தொழில்கள் செய்து வருவதால் தமிழக அரசியல் பத்திரிக்கையை சீரியசாக நடத்துவது போலத் தெரியவில்லை.
முக்கிய அரசியல் பத்திரிக்கைகள் அனைத்தையும் பார்த்தாயிற்று. மற்ற வார, மாத இதழ்களுக்கு, அரசியல் ஒரு சிறு பகுதிதான் என்பதால், கருணாநிதி இவைகளை கண்டு கொள்வதில்லை.
தொலைக்காட்சி ஊடகங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை விளக்கத் தேவையில்லை. தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் மக்கள் அப்படியே உண்மை என்று நம்பும் காலம் மலையேறி விட்டது. பின்னே, விஜயின் வேட்டைக்காரன் படத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று சன் நியூஸில் அரை மணிக்கொரு முறை சொன்னால், மக்கள் சிரிக்க மாட்டார்கள் ?
பெரும்பாலான தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குவதால், அவற்றில் உண்மை செய்திகளை காண்பது கடினமாக இருக்கிறது.
இந்நிலையில், ஒரு ஜனநாயகத்துக்கு, சுதந்திரமான பத்திரிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லையென்றால், ஹிட்லரின் தளபதி, கோயபல்ஸ் பத்து முறை ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று கூறியது, இப்பொழுது இருக்கும் பத்திரிக்கைளால் நடைமுறைக்கு வந்து விடும்.
சரி. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. விமர்சனங்களே அவசியம் இல்லை என்றால் அதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சிறப்பாக நடக்கும் ஆட்சி கூட, தவறுகள் இழைக்கக் கூடும். அந்தத் தவறுகளை சுட்டிக் காட்டி, அந்த ஆட்சியை மேலும் சிறப்பாக நடத்த பத்திரிக்கைகள் அவசியம்.
அப்படிப்பட்ட சுதந்திரமான பத்திரிக்கைகள் இல்லாது போனால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவாகும். ஜனநாயகம் என்பது, தானாக வாடி, வதங்கி, உதிர்ந்து விடும்.
தமிழ்நாட்டில், பத்திரிக்கைகள் ஏற்படுத்தியுள்ள இந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பும் திறன், பதிவர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த பதிவுலகம் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. இங்கே எழுத்துச் சுதந்திரம் உண்டு.
நியாயமாக எழுதினால், நம்மை வேலையை விட்டு அனுப்பி விடும் முதலாளியும் இல்லை, அரசுக்கு எதிராக எழுதினால், விளம்பரம் வராதே என்று கவலைப்படும் வியாபார நெருக்கடியும் இல்லை.
நமது பதிவுலகத்தில் பெரும்பாலான பதிவுகள் செய்தித் தாள்களில் வருபவற்றை மறு பதிவு செய்பவையாகவும், சினிமா செய்திகளை பெரிது படுத்துவதாகவும் உள்ளன.
இப்பதிவுலகத்தை, இந்த அரசில் ஏற்பட்டு வரும் ஊழல்களை வெளிக் கொணர சுதந்திரமான ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு இயந்திரத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் அரசு ஊழியர்களே !. அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலில், புறங்கையை நக்காமல், ஊழலை எதிர்க்க திராணியும் இல்லாமல் வெளியே சொல்ல இயலாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் போராளிகளே.
உங்களுக்குத் தெரிந்த ஊழல்களை, இந்த பதிவுலகத்தில் வெளியிடுங்கள்.
முக்கிய செய்திகளை ஆசிரியருக்கு அனுப்பி, அது பிரசுரமாகாததால் மனம் புழுங்கும் பத்திரிக்கையாளர்களே. பதிவுலகிற்கு வாருங்கள்.
பதிவர்களே சீரியசான பதிவுகளை எழுதுங்கள். மக்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். இந்தப் பத்திரிக்கைகள் செய்யத் தவறுவதை நாம் செய்வோம்.
இது அற்புதமான உலகம். நமது ஜனநாயகத்தை, நமது குழந்தைகளுக்கு பத்திரமாக விட்டுச் செல்லும் பொறுப்பு நமக்கு உண்டு. அந்தப் பொறுப்பை தவற விட்டால், நம் கண் முன்னே, இந்த ஜனநாயகம் செத்து மடிவதை காணும் கொடுமைக்கு ஆளாவோம்.
ஜனநாயகத்தை பதிவுலகத்தால் மட்டுமே காப்பாற்ற இயலும். வாருங்கள் தோழர்களே!
எழுத்தாளர் சவுக்கு
Subscribe to:
Comments (Atom)